Die Sächsische Schweiz ist BUNT! - Da wollen wir hin. Im Interesse der Minderheiten in unserer Region.
Marcus Schubert (Landeskirchliche Gemeinschaft Pirna e.V.) aus Pirna
தமிழ் - Tamilsche / Sri Lanka
நாங்கள்
அக் ஷன் ஸீவில்கறேஜ் e.V அரசியல் நடுநிலைமையான நிறுவனமாகும். இது ஜனநாயக ரீதியல் வெளிப்படையானதும் , தவறுகளை தட்டிகேட்கும் தன்மை, சகிப்பு தன்மை , வேறு பாடற்ற நிலைக்காக செயல் படுவது போன்ற கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டதாகும். நாங்கள் வன்செயல்கள், யூத எதிர்ப்பு கொள்கை மற்றும் பக்கச்சார்பு போன்றை கொள்கைகளுக்கு எதிரான அமைப்பாகும். நாங்கள் சாக்ஸன்லுள்ள சுவிற்சலாந்து பிரதேசத்தில் செயல்படுகின்றோம் .
எமது நோக்கம் யாதெனில் , சமுதாயத்தில் நிலவுகின்ற பிரச்சனைகளிலும் உதவுவதாகும். நாங்கள் இளைஞர்களின் எழுச்சியுடன் , மக்கள் சமுதாய பொறுப்புக்களை அடையாளம் கண்டு அதை உணர்ந்து கடமைகளை செய்வதற்கு வழிநடத்த சந்தர்பம் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
எமது அடிப்படை கொள்கை யாதெனில், செயல்பாடுடையதும் , நம்பிக்கையும் கொண்ட, தங்களைச் சூழ உள்ள மக்களோடு சமய, சமூக , கலாச்சார பின்னணியை கருதாது , உறுதியான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாகும். மற்றவர்களுடன் சமாதானமாக வாழும் பொறுப்பினை ஒவ்வோருவருக்கும் உற்சாகம் ஊட்டுவோம். அத்துடன் பிரச்சனைகளை நேர்மையான முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்க உதவுவோம். சாக்ஸன்லுள்ள சுவிற்சலாந்து பிரதேசத்தில் திறமான அன்புறவை எற்படுத்த மேலும் விரும்புகிறோம்.
மக்களுடைய தொடர்பாடல்கள் எமது கொள்கைகள் மக்களை சென்றடைய அடிப்படையாக அமைகிறது. திறந்த மனப்பான்மையுடன் , மக்கள் தொடர்புடைய செயற்பாடுகள் , சங்கங்கள் , அதிகார சபைகள் , ஆலய சபைகள் மற்றும் அனைகமான ஜன நாயக ரீதியில் கைவிடப்பட்ட செயற் பாட்டாளர்கள் முதலியவர்களுக்கு நாங்கள் எமது செயல்பாட்டினால் சட்டபூர்வமாக தேவைகளை நிறைவேற்கின்றோம்.
ஒவ்வோரு மக்களும் ஜனநாயகத்தை குறிக்கோளுடனும் , நிச்சயத் தன்மையுடனும், அனுபவத்துடனும் நியாயமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு உதவலாம். ஏனென்றால் , எமது கடந்த கால நிகழ்வுகளை , சம்பவங்களை நாம் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் செயல்பாடான உறுதியான எதிர்கால நிகழ்வுகளுக்கு நாம் பொறுப்பெடுக்கலாம்.
வரலாறு
எமது இந்த இயக்கமானது 1998ல் நிறுவப்பட்டதாகும். காரணம் கூடுதலாக வாக்களித்த வலது சாரித் தீவிரவாதிகள், உள்ளூர் தேர்தலின் போது இளைஞர்கள் மத்தியில் தலைதூக்கிய வன் செயல்களாகும்.
Skinheads Sachshishe Schweiz(SSS) கழகமானது அக்காலத்தில் விசேடமாக செயல்பட்டடது. ஆனால் உள்துறை அமைச்சர் க்ளோஸ் கார்ட்ரத் என்பவரால் இக்கழகமானது குற்றச் செயற்பாடுகளுக்கு அத்திவாரமிடுகிறது என்ற காரணம் காட்டி இதனை 2001 ல் தடை செய்தார். 2003 ல் 17 அங்கத்தவர்கள் குற்றவாளிகளாக மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், ஆரம்ப கட்ட உறுப்பினர்களாக இருந்ததினாலும் இனங்காணப்பட்டார்கள்.
இந்த அச்சமான போக்கானது தான் ஏராளமான இளைஞர்களை துணிவுடன் அக்க்ஷன் ஸீவில்கறேஜ் e.V என்ற அமைப்பை ஏற்படுத்த தூண்டியது.
அன்றிலிருந்து சாக்ஸன்லுள்ள சுவிற்சலாந்து பிரதேசத்தில் தைரியமாக செயல் படுவதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி பல துறைகளில் எமது அமைப்பானது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதது அத்துடன் மேலும் பல செயற்பாடுகளில் விரிவாக்கம் அடைந்தது. இதனால் 2004ல் அக்க்ஷன் ஸீவில்கறேஜ் e.V என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது.
இந் நிறுவனத்தின் செய்ற்பாடுகளில் 80 க்கும் அதிகமான தொண்டர்கள், 3 பணியாட்கள் மற்றும் ஒருவரும் இத் தொண்டு வருடத்தின் சமூக சேவை அரசியலில் இணைந்தார்கள். நாங்கள் பூர்வாங்க சேவைகள், சங்கங்கள், பாடசாலைகள், ஊடகங்கள் , தீ அணைக்கும் படையினர், பொலிஸ் போன்றவர்களுக்கு பங்காளர்களாக இருக்கின்றோம்.
இத் தொடக்கமானது, இளைஞர்கள் நலன் விரும்பி சேவைகளுக்கு ( 75 SGB VIII) கொடுப்பனவாளர்களாக இருக்கிறோம். அத்துடன் பிர்ணாவின் கழகப் பதிவில் ( VR 899) இரு ஒரு தரும ஸ்தாபனமாக பதிவு செய்ப்பட்டுள்ளது.
Für die Übersetzung bedanken wir uns ganz herzlich bei Joseph Rabi, Mr.Tharsesias und Mr. Emmanuel Arul Gobinath.



























































































































